ஒமிக்ரான் பாதிப்பு உள்ள மாநிலங்களில் இருந்து வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை...சுகாதாரத்துறை செயலாளர்....!!!

ஓமிக்ரான் பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்களில் இருந்து வரும் அனைத்து நபர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை விடுத்துள்ளார்.
ஒமிக்ரான் பாதிப்பு உள்ள மாநிலங்களில் இருந்து வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை...சுகாதாரத்துறை செயலாளர்....!!!
Published on
Updated on
1 min read

அதில், கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானால் அவர்கள் தனிமைப்படுத்த பட வேண்டும் எனவும்  அவரோடு தொடர்பில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும் எனவும் அதில் கூறியுள்ளார்.

மாநில எல்லைகளில் கொரோனா கட்டுப்பாடுகளை கூடுதலாக கடைபிடிக்க வேண்டும் மாவட்ட நிர்வாககங்களுக்கு  ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.மேலும் பண்டிகை காலங்களில் கூட்டம் கூடுவதை தடுக்கவும், கொரோனா கட்டுப்பாடுகளை  கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com