மருத்துவர் தின விழாவில் விருதுகளை முதலமைச்சரிடம் எடுத்துக் கொடுத்த பெண்ணுக்கு கொரோனா

சென்னையில் நடைபெற்ற மருத்துவர் தின விழாவில், விருதுகளை எடுத்துக் கொடுத்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.
மருத்துவர் தின விழாவில் விருதுகளை முதலமைச்சரிடம் எடுத்துக் கொடுத்த பெண்ணுக்கு கொரோனா

கடந்த ஜூலை 1-ம் தேதி தேசிய மருத்துவர் தினத்தையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலை கழகத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.

மேடையில் மருத்துவர்களுக்கு விருதுகளை வழங்குவதற்காக, முதலமைச்சருக்கு விருதுகளை எடுத்து சென்ற நந்தினி என்ற பெண்ணுக்கு நேற்று கொரோனோ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, விழா மேடையில் இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட அனைவரும் கொரோனோ சுய பரிசோதனை மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தற்போது போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் வழக்கமான உடல் பரிசோதனைக்காக சென்றுள்ளார். அதனை முடித்து கொண்டு, அங்கேயே அவர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com