நீலகிரியில் கொரோனா தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி...! மருத்துவக் கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு...!

நீலகிரியில் கொரோனா தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி...!  மருத்துவக் கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு...!

நீலகிரி மாவட்டம்  உதகை அரசு மருத்துவ கல்லூரியில் கொரோனா தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. 

உதகை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்  45 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கை வசதி, 25 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் என 70 படுக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக மருத்துவ நிர்வாகம் அறிவிப்பு.

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்துப் போகும் நிலையில் தமிழ்நாட்டில் ,மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில்  கொரோனா தடுப்பு நடவடிக்கையை  முன்னெச்சரிக்கையாக செயல்படுத்தி வருகின்றனர்.  தற்போது உதகை அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோனா தொற்று ஏற்படும் நோயாளிகளை தனிமைப்படுத்த 45 படுக்கை வசதியும், 25 படுக்கை ஆக்சிஜன், வென்டிலேட்டர் வசதிகளுடன் தயார் நிலையில் இருப்பதாகவும், 

இதையும் படிக்க;... ஆபத்து என்றால் அல்வா சாப்பிடுவது போல..... அழிச்சாட்டியம் செய்யும் மாணவர்கள்.. !

உதகை மருத்துவக் கல்லூரியில் அனைத்து மருந்துகளும் கையிருப்பில் போதுமான அளவிற்கு இருப்பதாகவும் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மருத்துவக் கல்லூரி முதல்வர் மனோகரி மற்றும் துணை இயக்குனர் சுகாதார பணிகள் பாலுசாமி ஆகியோர் முன்னிலையில் கொரோனா  தொற்று ஏற்பட்ட நோயாளிகளுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

 இதையும் படிக்க;...தலைமைச் செயலாளர் நீதிபதி முன்பு நிற்க வேண்டிய நிலை.....காரணம் என்ன?!!

 இதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், செவிலியர்கள், மருத்துவ குழுவினர் கலந்துகொண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து ஒத்திகையை நடத்தினர் .