இன்று காலை 8 மணிக்கு துவங்குகிறது ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை...

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை துவங்குகிறது

இன்று காலை 8 மணிக்கு துவங்குகிறது ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை...

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி ஆகிய 9 புதிய மாவட்டங்களுக்கும் கடந்த 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

தேர்தலில் பதிவான வாக்குகள் சீல் வைக்கப்பட்டு  வாக்கு எண்ணும் மையங்களில்  பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.  இந்த நிலையில்  உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்குகிறது. 9 மாவட்டங்களில்  உள்ள 74 மையங்களில் 31 ஆயிரத்து 245 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

வாக்கு எண்ணும் மையத்துக்கு வருவோர் உரிய அடையாள அட்டை வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் சி.சி. டி.வி., கேமரா மற்றும் போதிய மேஜைகள் இருக்கிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையத்தில் கொரோனா தொற்று வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றிட வேண்டும் என்றும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை மு டிவுகளை  காலை 8 மணியிலிருந்து, தேர்தல் ஆணையத்தின் அதிகாரப் பூர்வ  இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.