6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை - நீதிமன்றம் உத்தரவு

6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை  -  நீதிமன்றம் உத்தரவு
Published on
Updated on
1 min read

சென்னை அண்ணா நகரை அடுத்த திருமங்கலம் பகுதியை சேர்ந்த 55 வயதான குமார், அதேபகுதியில் உள்ள 6 வயது சிறுமியிடம், தன் வீட்டு மாடியில் பூனைகள் இருப்பதாக கூறி, மாடிக்கு அழைத்து சென்று பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதை தெரிந்துகொண்ட தாய் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், போக்சோ சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பதிவான வழக்கில் குமார் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சென்னை போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் டி.ஜி.கவிதா ஆஜராகி வாதிட்டார்.

மேலும் படிக்க | 

நீதிபதி பிறப்பித்த உத்தரவில், குமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். மேலும், அபராத தொகையை சிறுமிக்கு வழங்க உத்தரவிட்டார்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com