6 முதல் 9 ம் வகுப்பு மாணவர்களுக்கு...EMIS தளம் மூலம் வினாத்தாள் அனுப்ப முடிவு!

6 முதல் 9 ம் வகுப்பு மாணவர்களுக்கு...EMIS தளம் மூலம் வினாத்தாள் அனுப்ப முடிவு!

Published on

சென்னை அரசு பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் முழு ஆண்டு மாதிரி தேர்வு வினாத்தாளை EMIS தளம் மூலம் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை அரசு பள்ளிகளில் பயிலும் 6 ஆம் வகுப்பு முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற  ஏப்ரல் 6 ம் தேதி தொடங்கி 17 ம் தேதி வரை  முழுஆண்டு மாதிரி தேர்வு நடைபெறவுள்ளது. 

இதுநாள் வரை இவர்களுக்கு வினாத்தாள்கள் அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சோதனை முயற்சியாக EMIS தளம் மூலம் வினாத்தாள்களை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

அதன்படி, தேர்வு நடைபெறும் அன்று காலை வேளையில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஆன்லைன் வாயிலாக வினாத்தாள் வழங்கப்பட்டு, வினாத்தாள்களை உடனடியாக அச்சிட்டு மாணவர்களுக்கு வழங்குமாறு திட்டமிட்டுள்ளது. மேலும் வினாத்தாள்களை அச்சிடுவதற்கு தேவையான பிரிண்டர்களையும் பள்ளிகளுக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com