இது செயல்படாத சட்சி!!! - டி.ஆர் கட்சி குறித்து தேர்தல் ஆணையம்!!!

நடிகர் டி.ராஜேந்தர் தொடங்கிய
இது செயல்படாத சட்சி!!! - டி.ஆர் கட்சி குறித்து தேர்தல் ஆணையம்!!!
Published on
Updated on
1 min read

டெல்லி: ஒரு கட்சி பதிவு செய்யப்பட்டு 5 ஆண்டுகளில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தலில் அந்த கச்டி நிற்கவில்லை என்றால் அத்தகைய கட்சி செயல்படாதவை என அறிவிக்கப்படும். அதே போல் 6 ஆண்டுகள் கட்சி தொடர்ச்சியாக தேர்தலில் நிற்கவில்லை என்றால் அத்தகைய கட்சிகள் பதிவு செய்யப்பட்ட பட்டியில் இருந்து நீக்கப்படும்.

இந்நிலையில், அதன் உத்தரவு மற்றும் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. அதில் கட்சி பதிவு செய்யப்பட்டு 5 ஆண்டுகளில், இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தல்களில் நிற்காத கட்சிகளின் பட்டியலில் நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர் தொடங்கிய "லட்சிய திராவிட முன்னேற்ற கழகம் கட்சி" இடம்பெற்றுள்ளது. மேலும், இக்கட்சி செயல்படாதவை என இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள நாடு முழுவதும் செயல்படாத 253 கட்சிகளின் பட்டியலில் டி ராஜேந்திரனின் லட்சிய திராவிட முன்னேற்ற கழகம் கட்சியும் இடம்பெற்றுள்ளது. இக்கட்சியின் பெயர் `லட்சியாகம்’ 4-A,  இந்தி பிரச்சார சபா தெரு, தி. நகர், சென்னை என்ற டி ராஜேந்திரன் வீட்டு முகவரியில் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com