தமிழகத்தில் நுழைந்தது டெல்டா பிளஸ் வகைக் கொரோனோ,.. சுகாதாரத்துறை அறிவிப்பு.!

தமிழகத்தில் நுழைந்தது டெல்டா பிளஸ் வகைக் கொரோனோ,.. சுகாதாரத்துறை அறிவிப்பு.!

தமிழகத்தில் தற்போது வரை ஒருவருக்கு டெல்டா பிளஸ் வகைக் கொரோனோ பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

டெல்டா வைரஸின் மரபணு மாற்றத்தால் உருவாகியுள்ள டெல்டா பிளஸ் திரிபு, தென் ஆப்ரிக்காவில் காணப்படும் பீட்டா வகை வைரஸின் மரபணுக்களையும் உள்ளடக்கியதாக அண்மையில் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இதனால் இந்த வைரஸை தற்போது பயன்பாட்டில் உள்ள கோவாக்சின், கோவிஷீல்டு உள்ளிட்ட தடுப்பூசிகளால் கட்டுப்படுத்த முடியாது எனவும், இந்த புதிய வைரஸ் நோய் எதிர்ப்பு திறனையும் முழுவதுமாக அழித்துவிடும் என நோய் தொற்று ஆய்வு நிபுணர்கள் எச்சரித்திருந்தனர். இதைத்தொடர்ந்து இந்த வைரஸை அச்சுறுத்தலுக்கு உரியது என மத்திய அரசு வகைப்படுத்தியுள்ளது.


இந்நிலையில்  மகாராஷ்டிரா, கர்நாடக, கேரள மாநிலத்தில் டெல்டா ப்லஸ் வகைகளை உறுதிசெய்யப்பட்ட நிலையில் தற்போது வரை தமிழகத்தில் ஒருவருக்கு  டெல்டா ப்ளஸ் பாதிப்பு தமிழகத்தில் கண்டறியப்பட்டுள்ளது  என தமிழக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com