“மத்திய அரசுக்கு எதிராக வரும் 15ம் தேதி ஆர்ப்பாட்டம் " - கே. எஸ் அழகிரி

“மத்திய அரசுக்கு எதிராக வரும் 15ம் தேதி ஆர்ப்பாட்டம் " - கே. எஸ் அழகிரி

மகாத்மா காந்தி தேசிய ஊரக  வேலை உறுதி திட்டத்திற்கு நிதி பங்களிப்பு தொகை வழங்காத மத்திய அரசுக்கு எதிராக வரும் 15 -ம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி தெரிவித்தார். 

ஏழை முன்னேற்றத்திற்காக கொண்டுவரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக  வேலை உறுதி திட்டத்திற்கு நிதி பங்களிப்பு தொகை வழங்காத மத்திய அரசுக்கு எதிராக வரும் 15ஆம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பட்டறை மாநாட்டில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,

“தமிழகத்தில் உள்ள திமுக அமைச்சர்கள் மீதான வருமான வரி சோதனை என்பது அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு ஒரு கட்சிக்கு எதிராக செயல்படுவதாகவே பார்க்கிறோம். இதனை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்”, என்றார். 

இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளதால் தமிழகத்தில் கூட்டணி இடம் பெற்றுள்ள கட்சிக்கு தொந்தரவு கொடுக்க வேண்டும் என்பதற்காகவே பாஜக இதனை செய்கிறது என அவர் தெரிவித்தார்.

இம்மாநாட்டில். பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் மாணிக் தாகூர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், சட்டமன்ற உறுப்பினர்கள்  ராஜேஷ்குமார், விஸ்வநாதன், ஜேஜே பிரின்ஸ், அசோகன், தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன், திருநெல்வேலி மாநகர் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com