மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக சென்னையில் ஆர்ப்பாட்டம்!

மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக சென்னையில் ஆர்ப்பாட்டம்!

மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக அன்னை இந்திரா காந்தி பெண்கள் நல முன்னேற்ற சங்கத்தினர் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

சென்னை எழும்பூரில் உள்ள இராஜரத்தினம் மைதானம் அருகில் அன்னை இந்திரா காந்தி பெண்கள் நல முன்னேற்ற சங்கத்தின் சார்பாக மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்யக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தை அன்னை இந்திரா காந்தி பெண்கள் முன்னேற்ற நல சங்கத்தின் தலைவர் கௌரி முன்னெடுத்து சென்றார். பெண்கள், சங்க நிர்வாகிகள் என பல்வேறு தரப்பினர்  இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த இந்திரா காந்தி பெண்கள் முன்னேற்ற நல சங்கத்தின் தலைவர் கௌரி பேசும் போது, "பெண்களுக்கு நடக்கும் பாலியல் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்ய வேண்டும். பெண்களுக்கு எல்லா துறையிலும் பாலியல் வன்முறை நடக்கிறது. பெண்களின் முன்னேற்றத்தை தடுக்கும் அநீதிகளை எதிர்த்து இந்திரா காந்தி பெண்கள் நல முன்னேற்ற சங்கத்தின் சார்பாக போராட்டங்கள் நடைப்பெறும்" என்று தெரிவித்தார். 

logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com