பல் பரிசோதனை திட்டம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்!

பல் பரிசோதனை திட்டம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்!

அரசுப்பள்ளியில் 10 வயது முதல் 13 வயது வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு பல் பாிசோதனை செய்யும் திட்டம் மூலம்  4 லட்சம் மாணவா்கள் பயனடைவாா்கள் என அமைச்சா் மா.சுப்ரமணியன்  பெருமிதம் தொிவித்துள்ளாா்.

சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் அரசு பல்மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 2017 - 2022 ஆம் கல்வி ஆண்டில் பயின்ற 86 இளங்கலை பல் மருத்துவ மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

பின்னர் மேடையில் பேசிய அமைச்சர், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் இருந்த மாணவ மாணவியர்களுக்கு பல் பரிசோதனை போன்ற பணிகளை நான் மேயராக இருந்த போது சென்னை பல் மருத்துவ கல்லூரி மூலம் செய்து இருக்கிறோம். அதே போல இப்போது தமிழகம் முழுவதும் உள்ள 10-13 வயது உள்ள அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு தமிழ்நாடு பல் மருத்துவ கல்லூரி மூலம் கடந்த 20 நாட்களுக்கு முன்பு இருந்து பல் பரிசோதனை செய்யும் திட்டத்தை முன்னெடுத்து இருக்கிறோம். இதன் வாயிலாக, சென்னையில் மட்டும்  54000 குழந்தைகளும் , மாநிலம் முழுவதும் 4 லட்சம் குழந்தைகளும் பயனடைவாா்கள் என குறிப்பிட்டுள்ளாா்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com