சாலை விபத்தில் உயிரிழந்தவரின் உடல் உறுப்புகள் தானம்... அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!!

தமிழகத்தின் முதல் முதலாக உடல் உறுப்பு தானம் செய்த நபருக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

உடல் உறுப்பு தானம் செய்யும் நபர்களின் இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்த வடிவேலு சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தாயார். அவரது உடல் உடல் உறுப்புக்கள் தானம் செய்யப்பட்டதால், அவருடைய இறுதிச்சடங்கு அரசு அறிவித்தபடியே, அரசு மரியாதை உடன் அவரது சொந்த ஊரான சின்னமனூரில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜ.பெரியசாமி தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா மாவட்ட கண்காணிப்பாளர் டோங்ரோ பிரவீன் உமேஷ் அரசியல் கட்சியினர் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com