மாவட்ட ஆட்சியா் திடீா் ஆய்வு...!  அரசு மருத்துவமனையில் ஓராண்டாக  பூட்டிகிடந்த ஸ்கேன் சென்டா் ...

நெல்லை அரசு மருத்துவ கல்லூாி  மருத்துவமனையில்  மாவட்ட ஆட்சியா் ஆய்வின் போது  ஒராண்டுக்கும் மேலாக பூட்டிக்கிடந்த ஸ்கேன் சென்டரை திறக்க அறிவுறுத்தினாா்.
 மாவட்ட ஆட்சியா் திடீா் ஆய்வு...!  அரசு மருத்துவமனையில் ஓராண்டாக  பூட்டிகிடந்த ஸ்கேன் சென்டா் ...

திருநெல்வேலி | பாளையங்கோட்டையில் இருக்கும் அரசு  மருத்துவ கல்லூாி மருத்துவமனைக்கு அம்மாவட்ட மக்களும் மட்டுமல்லாமல்  சுற்றுபுற மாவட்டங்களிலில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா். அந்த அரசு மருத்துவமனையில் ஆயிரம் படுக்கை வசதிகளுடம் பல்வேறு நவீன வசதிகளும் உள்ளது.

இந்நிலையில் நெல்லை மாவட்ட ஆட்சியா் காா்த்திகேயன் மற்றும் அவருடன் மூத்த  மருத்துவ  அதிகாரிகள் தீடிரென நெல்லை  அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தனா். அப்போது சிகிச்சைகாக வரும் மக்களிடம் குறைகளை கேட்டாா்.  மேலும் அவா்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்தும், அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தாா்.

இந்த  அரசு மருத்துவமனையில் சிடி ஸ்கேன் ,காமா(gamma)கேமரா ஸ்கேன் மற்றும் நியூக்ளியர் தெரபி சிகிச்சை செய்யும் வசதிகள் கொண்ட அறை கட்டப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றது.
பின்னா்  மருத்துவமனையில்  சிறப்பு பிாிவுகளில் ஆய்வு செய்த போது ஸ்கேன் சென்டரை  கடந்த ஒராண்டுக்கும் மேலாக திறக்கப்படாமல் இருப்பது  தொியவந்தது. 

இதனை தொடர்ந்து  ஸ்கேன் சென்டரை உடனே திறக்கும் படி மருத்துமனை நிர்வாக அதிகாரிகளிடம் மாவட்ட ஆட்சியா் கார்த்திகேயன் அறிவுறுத்தினார். இந்த திடீர் ஆய்வின் போது  நெல்லை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் பரபரப்பு நிலவியது.

-muruganantham

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com