இரண்டாண்டு திமுக ஆட்சியில் புதிய பேருந்துகள் எதுவும் விடவில்லை - குற்றம் சாட்டிய எம்.ஆர்.விஜயபாஸ்கர்!

இரண்டாண்டு திமுக ஆட்சியில் புதிய பேருந்துகள் எதுவும் விடவில்லை - குற்றம் சாட்டிய எம்.ஆர்.விஜயபாஸ்கர்!

2 ஆண்டுகால திமுக ஆட்சியில் புதிய பேருந்துகள் எதுவும் விடவில்லை என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டார்.

முன்னதாக, கரூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 2 ஆண்டுகால திமுக ஆட்சியில் புதிய பேருந்துகள் எதுவும் கொண்டு வரப்படவில்லை என குற்றம் சாட்டினார். மேலும், போக்குவரத்துத் துறையில் தனியார் மயத்தைக் கொண்டுவர அரசு முனைப்பு காட்டி வருவதாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், திமுக கூட்டணியை சேர்ந்த தொழிற்சங்கங்கள், தனியார் மயம் மற்றும் புதிய பேருந்துகள் இயக்கப்படாதது குறித்து எந்த கேள்வியும் எழுப்பவில்லை என புகார் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com