விஸ்வகர்மா திட்டத்திற்கு எதிராக முட்டாள் தனமான தீர்மானங்களை திமுக நிரைவேற்றியுள்ளது” - கரு.நாகராஜன்

விஸ்வகர்மா  திட்டத்திற்கு எதிராக முட்டாள் தனமான தீர்மானங்களை திமுக நிரைவேற்றியுள்ளது” - கரு.நாகராஜன்
Published on
Updated on
1 min read

மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்திற்கு எதிராக முட்டாள் தனமாக திமுக எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளது என பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

பிரதமர் மோடியின் 73வது பிறந்த நாளையொட்டி தமிழக பாஜக சார்பில் சென்னை சாலிகிராமத்தில் தூய்மை பணியாளர்களுக்கு புடவை, அரிசி உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இதனை மாநில துணை தலைவர் கரு.நகராஜன் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார், அதில் மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தில் கைவினை உள்ளிட்ட 18 தொழில் துறையினருக்கு மட்டுமே என நிதியுதவி என தெரிவிக்கப்பட்டுள்ளது, அதில் அவர்களது குழந்தைகள் படிக்க வேண்டாம் என்று எங்குமே சொல்லப்பட வில்லையென்றார். ஏன் திமுகவினர் பொது மக்களை ஏமாற்றுகின்றனர், கந்து வட்டிக்கு வாங்காமல் பாரம்பரிய தொழில்களுக்கு கடன் வழங்கப்படுகிறது என்றார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியை பாஜகவில் சேர வேண்டும் என மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் சொன்னதற்கு அமலாக்கத்துறையினர் வேதனையில் உள்ளனர்.நீதிமன்றத்தில் பொய்யான தகவலை தெரிவித்தற்கு தக்க நேரத்தில் நீதிபதியை கேட்பார்கள் என்றார். முதியோர் ஓய்வூதியம், விதவை நிதியுதவி வாங்கும் பெண்களுக்கு கலைஞர் உரிமை தொகையான ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டும் என்றார். நாளை நடைபெறும் காவிரி மேலாண்மை வாரியாக கூட்டத்தில் உரிய தண்ணீரை பெற்று தருமா என்ற கேள்விக்கு, ஒவ்வொரு முறை காவிரி மேலாண்மை வாரியம் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வரும் திமுக அமைச்சர் என்ன டிப்பன் , அதே பக்கோடாவா என்ற கேட்பார். எப்போது ஆலோசனை கூட்டம் முடியும் என்று தான் கேட்பார் என அரசு அதிகாரி தன்னிடம் தெரிவித்துள்ளார் எனவும் கரு.நாகராஜன் தெரிவித்தார்.

காவிரி ஆற்றின் குறுக்கே அனைத்து தடுப்பணைகள் கட்டி தமிழகத்தின் உரிமையை விட்டு கொடுத்தது திமுக தான் எனவும் குற்றம் சாட்டினார். பேரறிஞர் அண்ணா, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் விவகாரத்தில் வரலாற்று உண்மையை தான் அண்ணாமலை பேசியுள்ளார், இது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் தெரியும் என்றார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com