திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக்கூட்டம் வரும் 20-ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் அறிவித்துள்ளார்.
திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக்கூட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டது. இதனை அறிவித்த அக்கட்சியின் பொதுச்செயலாரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் வரும் 20-ம் தேதி திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக்கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என தெரிவித்தார்.
கூட்டத்தில் உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி அமைச்சர் கேட்டுகொண்டுள்ளார்.