திமுக யாருக்கும் அடங்கிய யானை இல்லை; யாராலும் அடக்கமுடியாத யானை என்று சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து முதல் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் ஆளுநர் கலந்துகொண்டு உரையாற்றினார். அதைத் தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி "ஆளுநர் உரையில் யானையும் இல்லை மணியோசையும் இல்லை" என விமர்சித்தார்.
அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் உரைக்கு பதிலளித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் "திமுக யாருக்கும் அடங்கிய யானை இல்லை; யாராலும் அடக்கமுடியாத யானை; அடக்கப்பட்ட யானைக்கு தான் மணி கட்டுவார்கள், திமுக அடக்கமுடியாத யானை. யானைக்கு 4 கால்கள் தான் பலம். அதுபோல திமுகவுக்கு சமூகநீதி, மொழிபற்று, சுயமரியாதை, மாநில உரிமை போன்ற 4 கொள்கைகள் தான் பலம்" என்று கூறினார்.