திமுகவில் உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது!

உட்கட்சி தேர்தலில் போட்டியிடுவோர் இன்று முதல் வேட்புமனுக்களை தாக்கல் செய்தின்றனர்.

திமுகவில் உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் உட்கட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் நான்கு நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

உட்கட்சித் தேர்தல்

திமுகவின்  நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டுள்ள 72 மாவட்டங்களில் அவைத் தலைவர், மாவட்ட செயலாளர், 3  துணைச் செயலாளர்கள், பொருளாளர் மற்றும் தலைமைக் கழகத்தால் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்ட  தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள்,  பொதுக்குழு உறுப்பினர்கள் ஆகிய பொறுப்புக்களுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்கி வருகிற செப்டம்பர் 25ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

அண்ணா அறிவாலயத்தில் மனு தாக்கல்

இந்நிலையில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் உட்கட்சி தேர்தலில் போட்டியிடுவோர் இன்று முதல் வேட்புமனுக்களை தாக்கல் செய்தின்றனர்.  சென்னை அறிவாலயத்தில் வேட்பாளர்கள் நேரில் மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

நாளை நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளவர். செப்டம்பர் 24 ஆம் தேதி  புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், நாகை, தஞ்சை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் போட்டியிடும் உறுப்பினர்கள் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனர்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை,  உள்ளிட்ட மாவட்டங்களில் செப்டம்பர் 25ம் தேதி வேட்புமனு தாக்கல் நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.