"வருகிற நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்" - அமமுக பொதுக்கூட்டத்தில் விவாதம்

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என அமமுக பொதுக்கூட்டத்தில் பேசிய தஞ்சை வடக்கு மாவட்ட கழக  துணைப்பொதுச்செயலாளர் ரெங்கசாமி   கூறியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை பேருந்து நிலையத்தில் பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாவட்ட கழகம் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டம்,  புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளர் ஓ.கார்த்திக் பிரபாகரன் புதுக்கோட்டை மத்திய மாவட்ட கழக செயலாளர் வீரமணி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் தஞ்சை வடக்கு மாவட்ட கழக துணைப்பொதுச் செயலாளர் ரெங்கசாமி சிறப்புறையாற்றினார். 

இந்த சிறப்புரையில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கர்நாடகாவில் ஆட்சி அமைந்துள்ளதாகவும் திமுகவினர் கர்நாடக அரசிடம் பேசி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வழிவகை செய்யுமா?  இல்லை வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டு கேட்கும் பொழுது கர்நாடகத்தில் இருந்து குடிநீர் கொண்டுவர வழிவகை செய்யுமா? என்று குற்றச்சாட்டை முன்வைத்தார். 

தொடர்ந்து, திமுக அரசு கொடுத்த 500 வாக்குறுதிகளை அறிவித்து அதில் இரண்டு வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றி மக்களை ஏமாற்றி வருவதாகவும், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதலில் நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறி வாக்குறுதி அளித்தனர் ஆனால் இன்றுவரை நடவடிக்கை எடுக்காமல் மக்களை ஏமாற்றி வருவதாகவும், அணைத்து பெண்களுக்கும் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்ததுவிட்டு ஒரு சில பெண்களுக்கு மட்டுமே வழங்கி அதற்கு ஆயிரம் காரணம் கூறி மக்களை ஏமாற்றி வருவதாகவும் குற்றம் சாட்டினார். 

மேலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் கூறினார். இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை வடக்கு மேற்கு மாவட்ட ஒன்றிய நகர பேரூர் ஊராட்சி கிளைகழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என 500கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com