அதிமுக தொடங்கி வைத்த திட்டங்ளுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி வருகிறது- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்!

அதிமுக தொடங்கி வைத்த திட்டங்ளுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி வருகிறது- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்!
Published on
Updated on
1 min read

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

திமுகவின் நோக்கம் மாறிவிட்டது

இந்நிகழ்விற்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ப.குமார் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசுகையில், அண்ணா ஆரம்பித்த  திமுகவின் நோக்கம் மாறிவிட்டது. ஒன்றரை ஆண்டு காலத்தில் திமுக பெயர் சொல்ல கூடிய அளவிற்கு எதுவும் செய்யவில்லை.

ஸ்டிக்கர் ஒட்டும் திமுக

எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது 2லட்சத்து 75 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டபணிகளை தொடங்கியதை தான் தற்போது ஆளும் திமுக  ஸ்டிக்கர் ஒட்டி வருகிறது. துவாக்குடியில்  ஏற்கனவே அமையப்பட்ட சுங்கச்சாவடியில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் மற்றொரு சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டிய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு  கண்டுகொள்ளவே இல்லை என அவரை சாடினார்.

தொண்டர்கள் நம்பிக்கையுடன் இருங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் போது தான் சோர்வடையாமல் இருக்க வேண்டும் என்றார். இந்த விழாவில் தலைமை கழக பேச்சாளர்கள் தில்லை செல்வம், தமிழரசன்,  உட்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com