கள் கடைகளுக்கான தடையை தமிழ்நாடு அரசு நீக்கத் தவறினால் வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் படுதோல்வி அடையும் என்று தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறியுள்ளார்.
தமிழ்நாடு கள் இயக்கத்தின் ஒருங்கிணை6ப்பாளர் நல்லசாமி கரூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், கள் இறக்குவதும் பருகுவதும் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் மக்களுக்கு கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமை என்று கூறினார்.
இதையும் படிக்க : தீபாவளி விடுமுறை ; ரூ.467 கோடிக்கு மது விற்பனை!
2024 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதி முதல் கள் இறக்கப்படும் என்றும், 15 ஆவது ஆண்டாக நடைபெறும் அறப்போராட்டம் வெற்றியில் முடியும் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், கள் கடைகளுக்கான தடையை தமிழ்நாடு அரசு நீக்கத் தவறினால் வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் படுதோல்வி அடையும் என்று தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறியுள்ளார்.