நடிகர் ரஜினிகாந்த்தை சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டாம் - வைகோ

நடிகர் ரஜினிகாந்த்தை சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டாம் - வைகோ

நடிகர் ரஜினிகாந்த் சொல்வது அவருக்கும் புரியவில்லை மற்றவர்களுக்கும் புரியவில்லை என்பதால் அவரை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என மதிமுக பொதுசெயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.

வைகோ கலந்துரையாடல்

கோவை சித்தாபுதூர் வி.கே.கே மேனன் சாலையில் அமைந்துள்ள மதிமுக அலுவலகத்தில் கோவை மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கலந்துரையாடினார்.

செய்தியாளரிடம் பேசிய வைகோ

பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், ஏகாதிபத்திய பாசிச சக்திகளை வீழ்த்த திராவிட மாடல் ஆட்சி என்ற பெயரில் மு.க ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், திமுக தலைமையிலான ஆட்சி கொள்கை ரீதியிலான ஆட்சி என்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார். பின்னர் ராஜினிகாந்த் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வைகோ, நடிகர் ரஜினிகாந்த் சொல்வது அவருக்கும் புரியவில்லை, மற்றவர்களுக்கும் புரியவில்லை எனவே அவரை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என நகைப்புடன் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com