இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த டிடிவி?  - அமலாக்கத்துறை முன் டிடிவி தினகரன் விசாரணைக்கு ஆஜர்!!

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த டிடிவி? - அமலாக்கத்துறை முன் டிடிவி தினகரன் விசாரணைக்கு ஆஜர்!!

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்தது தொடர்பான வழக்கில், அமலாக்கத்துறையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆஜரானார்.
Published on

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் போட்டியிட்ட சசிகலா உறவினரான தினகரனும், ஓ.பி.எஸ் தலைமையிலான எதிரணியும் இரட்டை இலை சின்னம் கேட்டு உரிமை கோரினர்.

இதனால் அதிமுகவுக்குள் குழப்பம் ஏற்பட்டதை அடுத்து, தேர்தல் ஆணையம் அச்சின்னத்தை முடக்கியது. இதனைத்தொடர்ந்து அச்சின்னத்தை பெற தினகரன், இடைத்தரகர் சுகேஷ் வாயிலாக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக சுகேஷ் சந்திரா கைது செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து தினகரனும்,  50 கோடி ரூபாய் பேரம் பேச உதவியதாக அவரது உறவினர் மல்லிகார்ஜூனாவும் கைது செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் இந்த வழக்கில் டிடிவி தினகரன் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில்  ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி அவர் இன்று விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். அதே போல் இடைத்தரகர் சுகேஷ் சந்திராவும் ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com