28 மாதங்களில் சென்னையில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்கள் இயக்கம் - மெட்ரோ ரயில் நிறுவனம்

அடுத்த 28 மாதங்களில் சென்னையில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. 

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இராண்டாம் கட்டம் திட்டத்தில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்களை உருவாக்க ’அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா’ நிறுவனத்துடன் 269 கோடி ரூபாயில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும், அதேபோல், இதற்கான சிக்னல்களை அமைப்பதற்கு ரூ.1620 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் ’ஹிட்டாச்சி ரயில் எஸ்டிஎஸ்’ நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சென்னை மெட்ரோ நிறுவனம் அறிவித்திருந்தது.

அந்த வகையில், கடந்த ஆண்டு 26 ரயில்கள் வழங்க ஒப்பந்தம் போடப்பட்டிருந்த நிலையில், தற்போது கூடுதலாக 10 ரயில்களுக்கு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதாகவும், அதன்படி மொத்தம் 36 மெட்ரோ ரயில்கள் வழங்கப்படும் என்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன் மூலம் அடுத்த 28 மாதங்களில் பூவிருந்தவல்லியில் கட்டப்பட்டு வரும் பணிமனையில் இருந்து 108 பெட்டிகளுடன் கூடிய 36 ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com