துரைமுருகனின் பேச்சால் சட்டப்பேரவையில் சிரிப்பலை...!

துரைமுருகனின் பேச்சால் சட்டப்பேரவையில் சிரிப்பலை...!
Published on
Updated on
1 min read

வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் உள்ள மோர்தானா அணையிலிருந்து வெளியேறும் நீர் கடலில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தில், கீழ் வைத்திணான்குப்பம் சட்டமன்ற உறுப்பினர் பூவை ஜெகன் மூர்த்தி, மோர்தானா அணையில் இருந்து வரும் நீர் வீணாக பாலாற்றில் கலந்து கடலுக்கு செல்வதை தடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். மேலும் நீரினை பாக்கம் ஏரிக்கு திருப்பி விடப்பட்டு குடியாத்தம் நகருக்கு குடி நீருக்காகவும், விவசாயிகளுக்கு பயன்படுகின்ற வகையிலும் நீரை திருப்ப வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், பாக்கம் ஏரியின் கொள்ளளவு குறைவாக உள்ளதால் பம்பிங் செய்வது கடினம் எனவும், ஏரியில் வலது புறம் - இடது புறம் என இரண்டு கால்வாய் உள்ளதால் கடலுக்கு நீர் செல்லாது எனவும் கூறினார். 

பின்னர் மீண்டும் பேசிய ஜெகன்மூர்த்தி, அமைச்சரின் சொந்த தொகுதி என்பதால் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனவும், திரும்ப நினைவுபடுத்துவதாகவும் கூறினார். 

அதற்கு பதில் அளத்த அமைச்சர் துரைமுருகன், தம்முடைய நீண்ட நாள் நண்பர் ஜெகன் மூர்த்தி மீண்டும் மீண்டும் கூறுவதால் முயற்சி செய்து பார்ப்பதாக தெரிவித்தார். அதனால் அவையில் சிரிப்பொலி எழுந்தது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com