2 கோடியைத் தாண்டிய ஆதார் எண் இணைப்பு...

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கபட்டதன் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது.

2 கோடியைத் தாண்டிய ஆதார் எண் இணைப்பு...

தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல்  தமிழ்நாடு முழுவதும் 2,816 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கான  கால அவகாசம் வரும் ஜனவரி மாதம் 31 ஆம் வரை நீட்டிக்கபட்டது.

இந்நிலையில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைத்தவர்கள் எண்ணிக்கை 2 கோடியை கடந்தது.  75% பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக தமிழ்நாடு  மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க | ஆதார் முகவரி புதுப்பித்தல்...! “குடும்பத் தலைவர்” முறை அறிமுகம்..!