15 மாநிலங்களில் காலியாகும் மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் - இந்திய தேர்தல் ஆணையம்

தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் காலியாகும் மாநிலங்களவை இடங்களுக்கு அடுத்த மாதம் 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
15 மாநிலங்களில் காலியாகும் மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் - இந்திய தேர்தல் ஆணையம்

தமிழகத்தில், டி.கே.எஸ் இளங்கோவன், நவநீதகிருஷ்ணன், ஆர்.எஸ் பாரதி, எஸ்.ஆர் பாலசுப்ரமணியன், ஏ.விஜயகுமார், கே.ஆர்.என் ராஜேஷ்குமார் ஆகியோரின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் விரைவில் முடிவடைகிறது.

இதேபோல், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 15 மாநிலங்களில் காலியாகப் போகும் 57 இடங்களுக்கான தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அடங்குவர் இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  வரும் ஜூன் மாதம் 21 ஆம் தேதி முதல், ஆகஸ்ட் முதல் தேதி வரை 15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலை அறிவித்துள்ளது. அதன்படி காலியாகும் இடங்களுக்கான தேர்தலில் போட்டியிட வரும் 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம், மனு தாக்கல் செய்ய கடைசி நாள் மே 31ம் தேதி ஆகும்.

இதேபோல், தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்களை திரும்ப பெற ஜூன் 3ம் தேதி கடைசி நாளாகும்; ஜூன் 10ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்கு பதிவு நடைபெறும் என தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், அன்றைய தினமே மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com