வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைப்பு:
தமிழ்நாட்டில் வங்கி கணக்கு இல்லாத குடும்ப அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கை தொடங்க ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், வங்கி கணக்கு வைத்திருப்போர் பாஸ் புத்தகத்தின் நகலில், குடும்ப தலைவர் பெயர் மற்றும், குடும்ப அட்டை எண்ணை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும் என கூட்டுறவுத்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதையும் படிக்க: அண்ணாமலையின் குற்றச்சாட்டு...ஆளுநர் எடுத்த நடவடிக்கை என்ன?
இந்நிலையில், வங்கிக் கணக்கு வைத்திருக்கும் குடும்ப அட்டைதாரர்களை சம்பந்தப்பட்ட கடை பணியாளர்கள் நேரில் சந்தித்து, வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டும் போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவுத்துறை பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.