கட்சி அலுவலகத்தில ஜெயலலிதாவின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து ஈபிஎஸ் மரியாதை...!

கட்சி அலுவலகத்தில ஜெயலலிதாவின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து ஈபிஎஸ் மரியாதை...!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு கட்சி தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலைக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக தலைமை அலுவலகம் விழா கோலம் பூண்டுள்ளது. தொண்டர்கள் புடை சூழ, அலுவலகம் வண்ண மலர்களாலும், தோரணங்களாலும் அலங்கரித்து வைக்கப்பட்டது. 

முன்னதாக பசுமை வழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் படத்திற்கு ஈபிஎஸ், மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின் பசுமை வழிச் சாலையிலிருந்து புறப்பட்டு தலைமை அலுவலகம் வந்த இபிஎஸ்க்கு வழி நெடுகிலும் தொண்டர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். 

இந்நிலையில் தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்திய இபிஎஸ், அலுவலகத்தில் உள்ள கொடி கம்பத்தில், கட்சி கொடியை ஏற்றி தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். 

அதனை தொடர்ந்து 75 கிலோ எடையிலான  பிரம்மாண்ட கேக்கை வெட்டி ஜெயலலிதாவின் பிறந்தநாளை கொண்டாடிய இபிஎஸ், அதனை தொண்டர்களுக்கு வழங்கி கொண்டாடினார். மேலும் இந்த நிகழ்ச்சியில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, ஜெயக்குமார், எம்.பி தம்பிதுரை, உட்பட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com