”இரட்டை இலை சின்னம் கிடைத்தாலும் பலனில்லை....” செந்தில் பாலாஜி!!!

”இரட்டை  இலை சின்னம் கிடைத்தாலும் பலனில்லை....” செந்தில் பாலாஜி!!!

முதலமைச்சர் வழங்கிய திட்டங்களுக்குச் சான்றாக வரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல் வெற்றி அமையும்.

கை சின்னத்தில்.... :

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களுக்கு கை சின்னத்தில் வாக்கு கேட்டு மதுவிலக்கு மற்றும் ஆய தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் வீரப்பன் சத்திரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி…

ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் சந்தித்தால் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையுமா? மக்கள் சுபிட்சம் பெறுவார்களா?  இலங்கை பிரச்சினைதான்தீர்ந்திடுமா? என கேள்வி எழுப்பினர்.

அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்தஅவர்...

கடந்த சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு தான் தோல்வி அடைந்தார்கள் என தெரிவித்தார் செந்தில் பாலாஜி.

மேலும் எங்களுக்கு போட்டியே இல்லை எனவும் இவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என நான் சவால் விடுகிறேன் எனவும் அவர்களால் சவால் விட முடியுமா என்பதை கேட்டுச்சொல்லுங்கள் எனவும் அவர் அதிமுகவினருக்கு சவால் விடுக்கும் விதமாக பேசியுள்ளார்.

அமமுக வேட்பாளர் வாபஸ் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர்...

கடந்த தேர்தலில் நோட்டாவுக்கும் குறைவாக வாக்கு பெற்றவர்கள் பற்றி பேச வேண்டாம் என தெரிவித்தார் செந்தில் பாலாஜி.

மேலும் முதலமைச்சர் வழங்கியதிட்டங்களுக்குச் சான்றாக வரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல் வெற்றியை பொறுத்து,நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதியையும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com