ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் வெற்றி எதிர்பார்த்த ஒன்றுதான்- உதயநிதி

ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் வெற்றி எதிர்பார்த்த ஒன்றுதான்- உதயநிதி

T20 கிரிக்கெட் போட்டி

தளபதி கோப்பை பெண்கள் T20 கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்த விளையாட்டுத்துறை அமைச்சர், திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி, விளையாட்டுத்துறை இணைந்து பணியாற்றி விளையாட்டுத்துறையை மேம்படுத்துவோம் என்று  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70ஆவது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக  சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மெரீனா விளையாட்டு மைதானத்தில் தளபதி கோப்பை பெண்கள் T20 கிரிக்கெட் போட்டியை விளையாட்டுத்துறை இலட்சினையையும் வெளியிட்டார்.

 உதயநிதி ஸ்டாலின் பேசுகையில் 

 ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஈரோடு கிழக்கில் முன்னிலை  பெற்று வருவது எதிர்பார்த்த ஒன்றுதான் என்றும் அதிமுகவின் பின்னடைவு குறித்த கேள்விக்கு மற்றவர்களின் தோல்வி குறித்து பேச விரும்பவில்லை என்றும் கூறினார்....

கேலோ இந்தியா போட்டியில் தமிழக வீரர்கள் தற்போது சிறப்பாக விளையாடி வருகின்றனர் கடந்த ஆண்டு 8ஆம் இடம் தமிழக வீரர்கள் பெற்றுள்ளனர் எனவேதான் போட்டியை நடத்த அனுமதி கேட்டு உள்ளோம்,தமிழகத்திற்கு கேலோ இந்தியா மூலம் நிதி குறைவாக வந்துள்ளது போட்டியை நடத்த அனுமதி மூலம் நிதி அதிகமாக கிடைக்கும் என்றும், ஈரோடு கிழக்கில் முன்னிலை வகுப்பது குறித்து பேசிய அவர் எதிர்பார்த்த முடிவு தான் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com