அரசு போதிய நிதி ஒதுக்குவதில்லை...முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு!

அரசு போதிய நிதி ஒதுக்குவதில்லை...முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு!
Published on
Updated on
1 min read

உள்ளாட்சி பிரதிநிதிகளுக்காக கரூர் மாவட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள சங்கத்திற்கு முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையர்றினார். 

போதிய நிதி ஒதுக்கப்படவில்லை

தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதால் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மக்கள் நலப் பணிகள் செய்ய முடியாத நிலை நிலவி வருகிறது. இதனை தமிழ்நாடு அரசிடம் எடுத்துரைப்பதற்காக தமிழ்நாட்டில் முதன்முறையாக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான சங்கப் உருவாக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான சங்கம்

கரூரில் உள்ள தனியார் மண்டபத்தில், கரூர் மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் சங்கம் என உருவாக்கப்பட்டுள்ளது. இன்று கரூர் மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் நலச்சங்கம் உள்ளாட்சி பிரதிநிதிகள் சங்கத் துவக்க விழா மற்றும் கருத்தரங்கம் கூட்டத்தில் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையர்றினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com