இங்கு விளையும் தக்காளிகள் சந்தைகளில் தரம் பிரிக்கப்பட்டு தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு தினந்தோறும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கால், ஏற்றுமதி பாதிக்கப்பட்டதால், தக்காளி விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வந்தனர்.