கடையின் முன் படுத்திருந்த நாய்,..சூடான எண்ணையை ஊற்றிய பாஸ்ட்-புட் கடைக்காரர்,.. வளைத்து பிடித்து வெளுத்த பொதுமக்கள்.! 

கடையின் முன் படுத்திருந்த நாய்,..சூடான எண்ணையை ஊற்றிய பாஸ்ட்-புட் கடைக்காரர்,.. வளைத்து பிடித்து வெளுத்த பொதுமக்கள்.! 
Published on
Updated on
1 min read

சென்னை திருவான்மியூரில் பாஸ்ட்-புட் கடை அருகே படுத்திருந்த நாயின் மீது சூடான எண்ணெயை ஊற்றி கொல்ல முயன்ற நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை திருவான்மியூர் காமராஜர் சாலையில்  சாய் தேவி என்ற பெயரில் பாஸ்ட்புட் கடை இயங்கி வருகிறது. இன்று வழக்கம் போல் கடையை திறந்து வைத்திருந்த போது அந்த பகுதியில் சுற்றி திரியக்கூடிய பெண் நாய் ஒன்று கடை அருகே படுத்திருந்தது.

அப்போது கடையில் பணிப்புரிந்து வந்த ஊழியர் ஒருவர் திடீரென ஆத்திரத்தில் சட்டியில் சூடாக இருந்த எண்ணெயை எடுத்து நாயின் மீது ஊற்றினார். இதில் உடல் முழுவதும் வெந்தபடியே அந்த நாய் சூடு தாங்காமல் அலறிதுடித்து ஓடியது.

இதனைக் கண்ட அதே பகுதியைச் சேர்ந்த ரேவதி என்ற நபர் உடனடியாக அந்த நபரை பிடித்து தர்ம அடிகொடுத்து திருவான்மியூர் போலீசாருக்கும் தகவல் அளித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த நபரை பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். 

விசாரணையில் அந்த நபர் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கமல் என்பதும், பாஸ்ட்-புட் கடையில் உதவியாளராக பணிப்புரிந்து வருவதும் தெரியவந்தது. இந்நிலையில் பாஸ்ட்-புட் கடை உதவியாளர் கமல் மீது விலங்குகள் பாதுகாப்பு நல ஆர்வலர் செந்தில் குமார் புகார் அளித்த நிலையில், இனிமேல் இதுபோன்ற தவறை செய்ய மாட்டேன் எனவும், நாயின் முழு மருத்துவ செலவையும் ஏற்றுக் கொள்வதாகவும் கமல் உறுதியளித்தார். 

வாயில்லா ஜீவன்களான விலங்குகளை காயப்படுத்தினாலோ அல்லது துன்புறுத்தினாலோ ஐ.பி.சி 428, 429 பிரிவுகளின் கீழ் 5 ஆண்டுகள் வரை சிறைக்கு செல்ல நேரிடும் எனவும் கமல் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு தண்டனை பெற்றுத் தரப்படும் எனவும் விலங்குகள் பாதுகாப்பு நல ஆர்வலர் செந்தில் குமார் தகவல் தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com