கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து அதிகாாிகளுடன் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் இன்று இறுதிகட்ட ஆலோசனை நடத்துகிறார்.
சட்டமன்ற தோ்தலின் போது குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உாிமைத்தொகை வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. அதன்படி கலைஞா் மகளிா் உரிமைத் திட்டம் வரும் 15-ஆம் தேதியன்று தொடங்கவுள்ளது. இந்தத் திட்டத்துக்கான விண்ணப்பப் படிவங்கள் நியாய விலைக் கடை பணியாளா்கள் மூலமாக வீடு வீடாக விநியோகம் செய்யப்பட்டது.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறுவதற்கு 3 கட்டங்களாக முகாம்கள் நடத்தப்பட்டன. அனைத்து முகாம்களிலும் சோ்த்து மொத்தமாக 1 கோடிய 63 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கைப்பேசி செயலி வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தொடர்ந்து, விண்ணப்பதாரா்கள் அளித்த தகவல்களை அரசு களஆய்வு மேற்கொண்டது. இந்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து இன்று முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் அதிகாாிகளுடன் இறுதிக்கட்ட ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
இதனிடையே இந்த திட்டத்தில் சுமார் 5 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: செந்தில் பாலாஜின் ஜாமீன் மனு இன்று விசாரணை!