அக்டோபர் இறுதிக்குள் அனைவரும் தடுப்பூசி போடவேண்டும்...

அக்டோபர் மாதத்திற்குள் நாடு முழுவதும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு விடும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அக்டோபர் இறுதிக்குள் அனைவரும் தடுப்பூசி போடவேண்டும்...

அக்டோபர் மாதத்திற்குள் நாடு முழுவதும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு விடும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பண்டிகை காலத்தை முன்னிட்டு அக்டோபர் மாதம் கொரோனா 3 ஆம் அலை உச்சத்தை அடைய கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளதால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தகுதியுடைய 94 கோடி பெரியவர்களில் 49 கோடி பேருக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுவிட்டதாகவும், மத்திய பிரதேசம், கேரளா போன்ற பல மாநிலங்களில் முதல் டோஸ் செலுத்தும் பணி அடுத்த மாதம் இறுதிக்குள் முடிவடைய உள்ளதால் நாடு முழுவதும் முதல் டோஸ் செலுத்தும் பணி அக்டோபர் மாதத்தில் நிறைவடைய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 ஆம் டோஸ் செலுத்தும் பணி இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் எனவும் தமிழகத்தை பொறுத்த வரை முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி நிறைவடைய அக்டோபர் இறுதி வரை ஆக கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.