நீலகிரியில் முதல் முறையாக நடைபெறும் தேயிலைக் கண்காட்சி...!

நீலகிரியில் முதல் முறையாக நடைபெறும் தேயிலைக் கண்காட்சி...!

நீலகிரி மாவட்டத்தில் அகில உலக தேயிலை தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் முதல் முறையாக பொதுமக்களுக்கு தெளிவு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் இன்று தேயிலை கண்காட்சி தொடங்கியது. கண்காட்சியை தமிழ்நாடு சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் குத்து விளக்கேற்றி,காட்சி அரங்குகளை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

அகில உலக தேயிலை தினம் நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு  முதல்முறையாக தேயிலை சம்பந்தமாக பொதுமக்களுக்கு தெளிவு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக் கண்காட்சி நடைபெறுகிறது. இந்நிலையில், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மாவட்ட நிர்வாகம், தேயிலை வாரியம், சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக்கலை துறை உள்ளிட்ட துறைகள் இணைந்து இன்றும் நாளையும்  ஆகிய இரு நாட்களுக்கு தேயிலை கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டது. 

அதோடு, இந்த இரண்டு நாட்கள் நடைபெறும் தேயிலை கண்காட்சியில் நாம் அன்றாடம் பருகக்கூடிய தேயிலைத் தூளின்  பல்வேறுபட்ட வகைகள் காட்சிப்படுத்தப்பட்டு,  அதன் சுவை அறியும் திறனும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்படும்; மற்றும் விற்பனைக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த கண்காட்சியில் சிறு மற்றும் குரு தேயிலை விவசாயிகளின் சிறப்பு தேயிலையும் காட்சிப்படுத்தப்பட உள்ளது. இந்த கண்காட்சியில் சுமார் 30 மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு கலப்படம் இல்லாத தேயிலைத் தோள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 

மேலும் அகில உலக தேயிலை தினத்தை ஒட்டி இண்ட்கோசர்வ் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே தேயிலை உற்பத்தி மற்றும் கலப்படமில்லாத தேயிலை தூள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கட்டப்பட்டு தேயிலை தொழிற்சாலையை நேரில் பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

குறிப்பாக, தேயிலை தூள் தயாரிக்கும் இயந்திரங்களை காட்சிப்படுத்தி எவ்வாறு தேயிலையில் இருந்து தேயிலை தூள் தயாரிக்கப்படுகிறது என்பதனை விளக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி கண்காட்சிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் தேநீர் சுவைத்து பார்க்கவும் வசதிகள் செய்யப்பட உள்ளது. 

தேயிலையின் தரம், மனம், சுவைக்கான போட்டிகளும் நடைபெற உள்ளது. குறிப்பாக தேயிலை கலப்படம் குறித்து விழிப்புணர்வு வழங்கப்படும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக தேயிலை விழிப்புணர்வு ஏற்படுத்து வகையில் 'டைகர் ஹில்' பகுதியில் 1000 க்கு மேற்பட்டவர்கள் விழிப்புணர்வு மனித சங்கிலி நடத்தினர். இதனை சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமசந்திரன், மாவட்ட ஆட்சித் தலைவர் அமரீத், தேயிலை வாரிய செயல் இயக்குநர் முத்துகுமார் துவக்கி வைத்தார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com