தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் சதம் அடித்த வெயில்...!

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் சதம் அடித்த வெயில்...!

தமிழ்நாட்டில் திங்கட்கிழமை மட்டும் 7 மாவட்டங்களில் வெயில் சதமடித்த நிலையில் செவ்வாய்க்கிழை  ஐந்து மாவட்டங்களில் சதத்தைக் கடந்துள்ளது. 

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெயில் சுட்டெரித்து வருகிறது.  அந்தவகையில், திங்கட்கிழமையான நேற்று 7 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்திருந்த நிலையில், இன்று தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்துள்ளது.

அதன்படி, ஈரோட்டில் 103 புள்ளி 28 டிகிரி ஃபாரன்ஹீட் என்ற அளவைத் தொட்டுள்ளது. கரூர் மாவட்டம்  பரமத்தியில் 103 புள்ளி 10 டிகிரி ஃபாரன்ஹீட்டும், மதுரை நகரில் 102 புள்ளி 20 டிகிரி ஃபாரன்ஹீட்டும், திருச்சியில் 100 புள்ளி 22 டிகிரி ஃபாரன்ஹீட்டும் பதிவாகியுள்ளது.   

தமிழ்நாட்டில் படிப்படியாக வெயில் அதிகரித்து வரக்கூடிய நிலையில் கடந்த சில நாட்களாக 100, 101 என்ற பெரனிட் வெயில் அடித்து வந்த நிலையில், இன்று ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக 103.28°F வெயில் தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com