மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 2,00,000 நிவாரணம்..!

மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 2,00,000 நிவாரணம்..!
Published on
Updated on
1 min read

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது. 

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3-பேர் உயிரிழந்த விவகாரம் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூ. வழங்க முதலமைச்சர் அறிவித்த நிலையில்,  அதற்கான காசோலையை சார் ஆட்சியர் கௌஷிக் உறவினர்களிடம் வழங்கினார்.

கன்னியாகுமரி மாவட்டம் திரீவட்டார் பகுதியை சேர்ந்தவர் சித்திரா.  இவருக்கு ஆதிரா (23) என்ற மகளும் அஸ்வின் (21) என்ற மகனும் உண்டு. மகள் ஆதிராவிற்கு குளச்சல் பனவிளை பகுதியை சேர்ந்த ஸ்ரீசுதன் என்பவருடன் திருமணம் ஆன நிலையில்,  தற்போது 8-மாத கர்ப்பிணியாக இருந்த அவர் தாய் வீட்டிற்கு பிரசவத்திற்காக சென்றுள்ளார்.

இந்த நிலையில் கடந்த  இரண்டு நாட்களுக்கு முன் அஸ்வின் வீட்டின் மேற்கூரையை கம்பியால் குத்த முயன்ற போது கூரை மீது இருந்த மின் கம்பியில் இருந்து பாய்ந்த மின்சாரம் அவர் மீது தாக்கியது.  இதனால் அலறி சத்தம் போட்ட அவரை தாய் சித்ரா,    சகோதரி ஆதிரா ஆகியோர் காப்பாற்ற முயன்ற போது மூன்று பேரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த நிலையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்ச ரூபாய் வழங்க முதலமைச்சர் உத்தரட்டார்.

இதனையடுத்து, இன்று அவர்களது உறவினர்களை வீடுகளில் சென்று சந்தித்த பத்மநாபபுரம் சார் ஆட்சியர் கௌஷிக்,  உயிரிழந்த 3 பேருக்கும் தலா 2 லட்ச ரூபாய்கான காசோலையை  வழங்கினார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com