முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 74-வது பிறந்த நாள் - ஓபிஎஸ், இபிஎஸ் அவரது திருவுருவ சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்துகின்றனர்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 74-வது பிறந்த நாளையொட்டி இன்று அவரது திருவுருவ சிலைக்கு அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்துகின்றனர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 74-வது பிறந்த நாள் - ஓபிஎஸ், இபிஎஸ் அவரது திருவுருவ சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்துகின்றனர்

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 74-வது பிறந்த நாளான இன்று  காலை 10 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, தலைமை கழகமான எம்.ஜி.ஆர் மாளிகையில்  உள்ள ஜெயலலிதாவின் திருவுருவச் சிலைக்கு, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கட்சிக் கொடியினை ஏற்றிவைத்து, இனிப்பு வழங்க உள்ளனர்.  அதனைத் தொடர்ந்து, ஜெயலலிதாவின் 74-வது பிறந்த நாள் விழா சிறப்பு மலரை அவர்கள் வெளியிடுகின்றனர். 

இந்நிகழ்ச்சியில், தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இதே போல் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அ.தி.மு.க. தொண்டரகள் ஜெயலலிதா பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட இருக்கின்றனர். 

இன்று தமிழக அரசு சார்பில்  ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு. மா.சுப்ரமணியன் கலந்துக் கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com