மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் கூடுதல் கட்டிடத்திற்கு அடிக்கல்...!!
மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் கூடுதல் கட்டடத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் அடிக்கல் நாட்டினர்.
மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு சுமார் 155 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு , உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் பங்கேற்று அடிக்கல் நாட்டினர்.
இதை தொடர்ந்து மயிலாடுதுறையில் புதிதாக கட்டப்பட்ட நீதிமன்ற கட்டிடத்தை முதலமைச்சர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்த விழாவில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, ரகுபதி மற்றும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இதையும் படிக்க: மன்னிப்பு கோர நான் சாவர்க்கர் இல்லை.....!!