மோசடி செய்யும் வட்டி கும்பல்…நடவடிக்கை எடுக்குமா காவல்துறை?

தொடர்ந்து மாதந்தோறும் ஜெயக்குமார் யோகானந்தன் தெரிவித்த வட்டியை கட்டி வந்துள்ளார்.

மோசடி செய்யும் வட்டி கும்பல்…நடவடிக்கை எடுக்குமா காவல்துறை?

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கீழ் குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார்.

ரியல் எஸ்டேட் தொழில்

இவர் அப்பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் ஜெயக்குமார் அப்பகுதியில் உள்ள பிரபல பைனான்சியர் யோகநந்தன் என்பவரிடம் வீட்டுமனை பத்திரம் வைத்து மூன்று லட்ச ரூபாய் பணம் பெற்றதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து மாதந்தோறும் ஜெயக்குமார் யோகானந்தன் தெரிவித்த வட்டியை கட்டி வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து மூன்று லட்ச ரூபாய் பெறப்பட்ட பணத்திற்கு  பத்து லட்சத்திற்கு மேலாக வட்டி கட்டி வந்த நிலையில் தற்பொழுது ஜெயக்குமார் வீட்டு மனை பட்டாவை மீட்பதற்கு சென்று கேட்டுள்ளார். அதற்கு பைனான்சியர் யோகானந்தன் 34 லட்ச ரூபாய் செலுத்த வேண்டியதாக உள்ளதாக  தெரிவித்ததை கேட்டு அதிர்ச்சி அளித்துள்ளார்.

வட்டி மோசடி

ஜெயக்குமார் வாங்கிய பணத்திற்கு கூடுதலாகவே வடிகட்டி வரும் நிலையில் தற்போது 34 லட்சம் வழங்க வேண்டும் என தெரிவித்ததை குறித்து விவாதம் செய்துள்ளார். இருப்பினும் அவரை அங்கிருந்து மிரட்டி அனுப்பி உள்ளனர். இதனைத் தொடர்ந்து யோகானந்தர் ஜெயக்குமாரின் வீட்டை தற்போது பூட்டி வைத்திருப்பதாகவும் இதனால் ஜெயக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் நடுத்தெருவில் தங்க இடம் இன்றி தவித்து வருவதாக கூறப்படுகிறது.

 காவல் நிலையத்திற்குபுகார் தெரிவிக்க சென்றால் ஜெயக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்து விடுவதாக யோகானந்தன் மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே இதனைத் தொடர்ந்து ஜெயக்குமார் மற்றும் அவரது தாயார் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருகை தந்து கந்து வட்டி விட்டு வீட்டை அபகரித்து மோசடி செய்துள்ள யோகானந்தன் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் மனுவினை வழங்கியுள்ளார்.