ஸ்டெர்லைட் ஆலை: "கழிவுகள் அகற்றும் பணியை அரசே மேற்கொள்ள முடிவு" பூவுலகின் நண்பர்கள் வரவேற்பு!

ஸ்டெர்லைட் ஆலை: "கழிவுகள் அகற்றும் பணியை அரசே மேற்கொள்ள முடிவு" பூவுலகின் நண்பர்கள் வரவேற்பு!

ஸ்டெர்லைட் ஆலை கழிவுகள் அகற்றும் பணியை அரசே மேற்கொள்ள முடிவெடுத்திருப்பதை பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வரவேற்றுள்ளது.

ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிரான மக்கள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலை மூடப்பட்டது. இந்நிலையில் மூடப்பட்ட தொழிற்சாலையிலிருந்து கழிவுகளை வெளியேற்றுவது, கட்டிட பாதுகாப்பை மதிப்பீட்டாய்வு செய்வது, ஆலையில் உள்ள உதிரிபாகங்கள், உபகரணங்களை வெளியே எடுத்துச் செல்வது உள்ளிட்டவற்றிற்கு அனுமதி கேட்டு ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் வேதாந்தா நிர்வாகத்தை ஆலைக்குள் கழிவுகளை அகற்றுவதற்காக அனுமதிக்கக் கூடாதென ஊர்ப் பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து  துணை ஆட்சியர் தலைமையில் மொத்தம் 9 பேர் கொண்ட உள்ளூர் மேலாண்மைக் குழு ஒன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரால் அமைக்கப்பட்டுள்ளது. இதனை வரவேற்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில் "தூத்துக்குடி மக்களையும், நிலத்தையும், நீரையும், காற்றையும் மாசுபடுத்தி 15 பேரின் படுகொலைக்குக் காரணமான ஸ்டெர்லைட் ஆலையை இடித்து அகற்றுவதே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும்" என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com