சாலையில் சென்ற அரசு பேருந்தின் முன்பக்க சக்கரம் கழண்டு விழுந்த விபரீதம்! வெளியான சிசிடிவி காட்சிகள்!  

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் ஓடும் அரசு பேருந்தின் முன் புற சக்கரம் கழன்று ஓடிய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் மதுரை அரசு போக்குவரத்து கழக கிளை பணிமனை உள்ளது. இங்கிருந்து 44 டவுன் பஸ்கள் சுற்று வட்டார கிராமங்களுக்கு இயக்கப்படுகிறது. நேற்று மாலை 5.30 மணிக்கு மழவராயனேந்தலில் இருந்து மதுரை பெரியார் பேருந்து நிலையம் சென்ற அரசு டவுன் பஸ் (வண்டி எண் TN 58 N 624) திருப்புவனம் வரும் போது பேருந்தின் முன் புற சக்கரம் கழன்று ஓடி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 2 டூவீலர்கள் மீது விழுந்து சேதமடைந்தது. நல்வாய்ப்பாக உயிர் சேதம்  ஏதுவும் ஏற்படவில்லை.

பின்னர் தகவல் அளிக்கப்பட்டதும் உடனடியாக மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு பேருந்தில் ஒருந்த பயணிகள் வேறு பேருந்தில் சென்றனர். சக்கரம் கழன்று ஓடிய சம்பவம் அருகில் உள்ள கடைகளில் பொருத்தப் பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.