விவசாயிகளுக்கும் அதிகாரிகளுக்குமான இடைவெளி குறையும்- அமைச்சர் உறுதி!

அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் விவசாயிகளுக்கும் அதிகாரிகளுக்குமான இடைவெளியை குறைக்கும் வகையில் வேளாண் துறை நிதி நிலை அறிக்கை இருக்கும்  என்று அமைச்சர் எம்.ஆர்.கே . பன்னீர்செல்வம் தெரிவித்தார்.  

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு தகவல் அளித்த அமைச்சர் எம்.ஆர்.கே . பன்னீர்செல்வம், கடந்த பத்தாண்டுகளில் விவசாயிகளுக்கும் அதிகாரிகளுக்குமான இடைவெளி அதிகரித்துள்ளது. வேளாண்மை துறை அதிகாரிகள் விவசாயிகளை தொடர்ந்து  சந்திப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யக்கூடிய விளைபொருட்களை சந்தையில் நேரடியாக விற்பனை செய்வதற்கு தான் உழவர் சந்தை உருவாக்கப்பட்டது. ஆனால் வழக்கமான சந்தையாக  உள்ளதால் மீண்டும் உழவர் சந்தையாக செயல்படும் விதமான மாற்றங்களை கொண்டு வரவும், அதிகாரிகள் தொடர் கண்காணிப்புல் இருக்கவும் வேளாண் நிதி நிலையில் திட்டமிடப்பட்டுள்ளது. விலை கிடைக்கும் என்பதற்காக விவசாயிகள் ஒரே பயிரை பயிருடுவதால் உரிய விலை கிடைப்பது இல்லை. எனவே எந்த மாதிரியான பயிர்களை  நிலங்களில் பயிரிடுவதற்கும் விலை கிடைப்பதற்கும்  வழிவகை செய்யப்படவுள்ளது.