பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட தடை- தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து கொண்டாட தமிழக அரசு தடை விதித்துள்ளது. 
பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட  தடை- தமிழக அரசு அறிவிப்பு
Published on
Updated on
1 min read

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தற்போதுள்ள கொரோனா பரவல் சூழலை கருத்தில் கொண்டு, சமய விழாக்கள், மதச் சார்பான ஊர்வலங்களை நடத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் ஒரு பகுதியாக விநாயகர் சதுர்த்தியையொட்டி, பொது இடங்களில் சிலை வைக்கவும், பொது இடங்களில் கொண்டாடுவதற்கும் அனுமதி மறுக்கப்படுவதாகவும், சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் விநாயகர் சதுர்த்தியையொட்டி பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சிலை வைத்து வழிபாடு செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது, 

சிலைகளை தனி நபர்களாக எடுத்துச் சென்று அருகில் உள்ள நீர் நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com