“ஆளுநர்,.. அரசியல் சட்டம் தெரியாத; அறியாத _______” ...! - ஆ.ராசா.

“ஆளுநர்,.. அரசியல் சட்டம் தெரியாத; அறியாத _______”  ...!    - ஆ.ராசா.

தமிழகம் முழுவதும் திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டங்களை நடத்த திமுக தலைமை கழகம் உத்தரவிட்டது. அதன் ஒரு பகுதியாக மேட்டுப்பாளையம் கோ -  ஆபரேட்டிவ் காலனியில் நகர செயலாளர்கள் முனுசாமி,முகமது யூனூஸ் தலைமையில் திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் நீலகிரி எம்பி - யும்,திமுக துணைப்பொதுச்செயலாளருமான ஆ.ராசா, கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, தலைமை கழக பேச்சாளர் நன்னியூர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். அப்போது,பேசிய நீலகிரி எம்பி ஆ.ராசா சாதி ஒழிய வேண்டும்,சாதி மறைய வேண்டும் என விரும்பிய இயக்கம் திராவிட இயக்கம்,திராவிட மாடல். அதனை செய்து காட்டியவர் தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என பெருமிதத்துடன் பேசினார்.

மேலும்,சனாதனத்திற்கு எதிரான இயக்கமே திராவிட மாடல் இயக்கம் எனவும்,  "தற்போதுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் சட்டம் அறியாத மூடன்" எனவும், "அரசியல் சட்டம் அறியாத முட்டாள்" எனவும் சாடினார்.

மேலும்,திராவிட மாடல் ஆட்சி குறித்த நியாயமான, நேர்மையான விமர்சனங்களை தாங்கக்கூடிய பக்குவம் கொண்டவர்கள் திராவிட இயக்கத்தினர்.மாறாக ஓடி ஒளிபவர்கள் அல்ல. விமர்சனங்களை தாங்க முடியாமல் மீண்டும் தூசிப்போர்களும் அல்ல எனவும்,கொரோனா காலகட்டங்களில் கொரோனா உச்சகட்டத்தில் இருந்த நேரத்தில் பிரதமர் மோடியை போலவோ,அமைச்சர்களை போல ஓடி ஒளிந்து கொள்ளாமல் மக்களோடு மக்களாக மருத்துவர்கள் அணியும் கவச உடையை அணிந்து நோயாளிகளைத்தொட்டு நலம் விசாரித்ததோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு தேவையான சிகிச்சை முறையாக வழங்கப்படுகிறதா என நேரில் ஆய்வு மேற்கொண்டவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் எனவும் பேசினார்.

மேலும்,முத்தமிழறிஞர் கலைஞருக்கு பேனா நினைவுச்சின்னம் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் குறித்து பேசிய அவர் அந்த பேனா வெறும் பேனா அல்ல பெண்களுக்கு சொத்துரிமை வழங்க கையெழுத்திட்ட பேனா, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் உள்ளிட்ட மக்களுக்கு தேவையான திட்டங்களுக்காக கையெழுத்திட்ட பேனா என பெருமிதத்துடன் பேசினார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com