எந்த சட்டத்தை வைத்து அதிகாரம் இல்லை என்கிறார் ஆளுநர்...? சபாநாயகர் கேள்வி!

எந்த சட்டத்தை வைத்து அதிகாரம் இல்லை என்கிறார் ஆளுநர்...? சபாநாயகர் கேள்வி!
Published on
Updated on
1 min read

ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க பேரவைக்கு அதிகாரமில்லை என எந்த சட்டத்தை வைத்து ஆளுநர் கூறுகிறார் என சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார். 


சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது குறித்து பேசினார். அப்போது, 2022 அக்டோபர் 1-ம் தேதி தமிழ்நாடு அரசால் அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார் என்றும், அவசர சட்டத்துக்கும், சட்ட மசோதாவுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்றும் கூறினார். 

மேலும்,  ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க பேரவைக்கு அதிகாரமில்லை என எந்த சட்டத்தை வைத்து ஆளுநர் கூறுகிறார் என்று கேள்வி எழுப்பிய அவர், இது தொடர்பாக ஆளுநருக்கு யாரேனும் அழுத்தம் கொடுக்கிறார்களா என்பது தெரியவில்லை என்றும் கூறினார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com