சைலேந்திரபாபுவை டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்க கோரிய தமிழ்நாடு அரசின் பரிந்துரைகளை நிராகரிக்கும் ஆளுநரை கண்டித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவரது அறிக்கையில்:-
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம்(டி.என்.பி.எஸ்.சி.,) தலைவராக நேர்மையாளரான முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திர பாபு அவர்களை நியமிக்குமாறு தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்திருந்தது.
சைலேந்திர பாபு அவர்களுக்கு அந்தத் தகுதி இல்லை என்று தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஆளுநர் ரவி நிராகரித்திருப்பது அவரது அதிகார எல்லையை மீறிய தான்தோன்றித்தனமான சர்வதிகார முடிவாகும்.
தமிழக அரசு செய்கின்ற பரிந்துரைகளை எல்லாம் நிராகரிக்கும் ஆளுநர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஏஜெண்டாகச் செயல்படுகின்ற தமிழக ஆளுநருக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.”
என கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதையும் படிக்க } டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தை நிராகரித்தார் ஆளுநர்!