தேசிய கீதத்திற்கு மரியாதை கொடுக்காமல் ஆளுநர் வெளியேறியது அநாகரிகம் - அமைச்சர்

சட்டபேரவை முதல் நாள் கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கீதம் முடியும் முன்பே வெளியேறினார்.
தேசிய கீதத்திற்கு மரியாதை கொடுக்காமல் ஆளுநர் வெளியேறியது அநாகரிகம் - அமைச்சர்
Published on
Updated on
1 min read

தேசிய கீதத்திற்கு உரிய மரியாதை அளிக்காமல் பேரவையில் இருந்து ஆளுநர் வெளியே சென்றது அநாகரீகமான செயல் என அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம் செய்துள்ளார். 


சட்டப்பேரவையின் முதல்நாள் நிகழ்வுகள் நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக அரசு சார்பில் உரிய அழைப்பிதழ் வழங்கப்பட்டு உரையும் ஒப்புதல் பெறப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் கூறினார். நடைமுறைகளுக்கு மாறாக, அரசியலமைப்பு சட்ட விதிகளுக்கு மாறாக, உரையை வாசித்திருப்பது வருத்தமளிப்பதாகவும் அவர் கூறினார். 

ஆளுநருக்கு உரிய மரியாதை அளித்து எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்ததாகவும், ஆனால் சமூகநீதி, சமத்துவம், பெண்ணடிமை உள்ளிட்ட வார்த்தைகளை அவர் பேச மறுத்துவிட்டதாகவும், தங்கம் தென்னரசு குற்றம்சாட்டினார். சனாதான கொள்கைகளை சட்டப்பேரவைக்கு கொண்டு வருவது ஏற்புடையது அல்ல எனவும்,  ஆளுநரோடு அதிமுகவும் தேசிய கீதத்தை புறக்கணித்தது அவமானமானது எனவும் அமைச்சர் கூறினார். அண்ணா பெரியார் பெயர்களை உச்சரிக்க மாட்டேன் என கூறிய ஆளுநரை கண்டிக்காமல்,  அடிமை சாசனத்தை எழுதி கொடுத்துள்ளது போல அதிமுக தேசிய கீதம் இசைக்கும் முன் வெளியேறி இருப்பதாகவும் தங்கம் தென்னரசு விமர்சனம் செய்தார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com